இலங்கை – பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பம்!
Tuesday, March 20th, 2018
தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரன்கிரி விளையாட்டு மைதானத்தில் 20, 22, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ரி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திலும், இரண்டாவதுபோட்டி மார்ச் 30ஆம் திகதி என்சிசி மைதானத்திலும் மற்றும் மூன்றாவது போட்டி மார்ச் 31ஆம் திகதி எஸ்எஸ்சி விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இந்த போட்டித்தொடர்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தென்னாபிரிக்க தொடரில் இளம் வேகப்பந்துவிச்சளர் ஒருவருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு!
ஒருநாள் தலைமையிலிருந்து தரங்க நீக்கம்..?
கால்பந்தாட்டத்தில் பற்றிக்ஸீக்கு தேசிய ரீதியில் மூன்றாவது இடம்!
|
|
|


