இலங்கை தேசிய கபடி அணியில் மட்டக்களப்பு வீரர் !
Friday, May 6th, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட கபடி வீரர்களுள் ஒருவரும், முன்னிலை கபடி பயிற்றுநராகவும் திகழும் துரைச்சாமி மதன்சிங் ஆசிய கபடி சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை தேசிய கபடி குழாமில் இடம்பெற்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய கபடி சுற்றுப் போட்டியானது இம்மாதம் மே 2 முதல் 9ஆம் திகதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுகிறது.
இச்சுற்றுப்போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை வீரர்கள் கடந்த திங்கட்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
இக்குழாமில் இடம்பிடித்துள்ள ரி.மதன் சிங் ஒரே ஒரு தமிழ் வீரர் இவராவார். சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மல்யுத்த வீரரான இவர், மல்யுத்த போட்டிகளிலும் தேசிய அளவில் பதக்கங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா இணை சாம்பியன்!
சிந்துவை தக்கவைத்தது சென்னை ஸ்மாஷர்ஸ்!
வெற்றிக்கு காரணம் கூறும் சந்திமால்!!
|
|
|


