இலங்கை – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையின் அணித்தலைவர் உபுல் தரங்க!
Thursday, January 26th, 2017
இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு, தென் ஆப்பிரிக்காவின் அணித் தலைவராக மீண்டும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் செயற்படவுள்ளார்.
அத்தோடு இந்த போட்டித் தொடரில் இலங்கை அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆறுமாதங்களின் பின்னர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் எதிர்வரும் சனிக்கிழமை எலிசபெத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில் , எதிர்வரும் 5 ஒருநாள் போட்டிகளுக்கு உபுல் தரங்க இலங்கை அணியின் தலைவராக செயற்படவுள்ளார். அத்தோடு இன்று நடைபெறவிருக்கும் டி20 போட்டிகளுக்கான தலைமை பொறுப்பு தினேஷ் சந்திமலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts:
பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிளிட்ஸ்கோ!
நடுவர்களிடம் சண்டை போட்ட டோனிக்கு அபராதம்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி : எல். பி. எல். ஒத்திவைப்பு : பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் இடம...
|
|
|


