இலங்கை டெஸ்ட் அணியின் பிரபல வீரருக்கு உபாதை!

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை அவரின் கை விரலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம்தெரிவித்துள்ளது.
இதனால் திமுத் கருணாரத்ன சுமார் ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகநேர்ந்துள்ளது.
இவர் 49 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 186 ஓட்டங்ளை பெற்றுள்ளார். இதில் 7 சதங்களும், 14 அரை சதங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யுவராஜின் திருமணத்தில் பங்கேற்கப் போவதில்லை – யுவராஜின் தந்தை அதிராடி!
போட்டிகளில் இருந்து விலகிய தவான்!
பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது!
|
|