இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர் இம்மாத இறுதியில்!
Saturday, June 17th, 2017
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது
இலங்கையில், 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டியைக் கொண்ட கிரிக்கட் தொடரில் ஸிம்பாப்வே அணி, பங்கேற்க உள்ளதுஇந்தப் போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன
இதற்கமைய, முதலாவது ஒருநாள் போட்டி 30 ஆம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை இரண்டாம் திகதி காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளன3 ஆம் 4 ஆம் மற்றும் 5 ஆவது ஒருநாள் போட்டிகள், முறையே 6ஆம், 8 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெறவுள்ளனஇதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி ஜுலை மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
106 ஒட்டங்களுக்கு சுருண்டது அவுஸ்திரேலியா!
கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல்கள் - சங்கா!
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!
|
|
|


