இலங்கை கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட்டதா?
Friday, July 8th, 2016
நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து சென்றிருந்த இலங்கையணிக்கு அங்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச அணி ஒன்று ஓர் நாட்டிற்கு போட்டிகளுக்காக செல்லும் போது அந்நாட்டில் வீரர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
எனினும், இங்கிலாந்து சென்ற இலங்கை அணியினர் தங்குவதற்கு சாதாரண விடுதி ஒன்றே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குடிபானம், உணவு வழங்குதலிலும் இலங்கை அணியினருக்கு பல முறைகேடுகள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதேவேளை, இலங்கை வரும் சர்வதேச அணிகளுக்கு பல உயர் வசதிகளை இலங்கை கிரிக்கெட்நிறுவனம் ஏற்படுத்திக்கொடுக்கின்றது.
ஆனாலும், இலங்கை அணியினருக்கு வெளிநாடொன்றில் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் இலங்கை அணி வீரர்கள் திருப்தியடையவில்லை என சொல்லப்படுகின்றது
Related posts:
|
|
|


