தோனி அதிரடி: பெங்களூரை பந்தாடியது சென்னை!

Thursday, April 26th, 2018

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில்  24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

பெங்களூர் ரோயல் செலன்ஞர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் பெங்களுரில் இடம்பெற்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட பெங்களூர் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.அவ்வணி சார்பாக அதிரடியாக விளையாடிய , ஏ.பி.டி வில்லியர்ஸ் 68 ஓட்டங்களையும் , டி கொக் 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் , பிராவோ மற்றும்  தாகூர் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் , 206 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 207 ஒட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

சென்னை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அம்பதி ராயுடு 81 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றார்.

7 ஆறு ஓட்டங்கள் மற்றும் ஒரு நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றார்.இந்நிலையில், இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளுக்கு அமைய 6 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

5 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

3வது இடத்தில், 8 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும், 4 வது இடத்தில் 6 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் உள்ளன.ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் அணி 6 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் வெற்றிப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: