இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்!
Monday, March 1st, 2021
இலங்கை கிரிக்கெட் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து டொம் மூடி இந்த பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக டொம் மூடி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
முரளி பிடிவாதகாரன்- ஜெயவர்த்தனே!
பட்மிண்டன் இறுதிப் போட்டியில் சிந்து!
கொல்கத்தாவை பந்தாடியது ஐதராபாத்!
|
|
|


