இலங்கை கிரிக்கட் அணியின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை!
Monday, April 29th, 2019
ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணிக்கு வழங்கும் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஒருமுறை பரிசீலிக்குமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனம் சர்வதேச கிரிக்கட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் இலங்கை கிரிக்கட் அணி தீவிரவாதிகளில் பிரதான இலக்காக உள்ளதாக புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் கிடைத்துள்ளதால் குறித்த கோரிக்கையை எழுத்து மூலம் மேற்கொண்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டாலும் , தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு அதனை விட அதிக பாதுகாப்பினை இலங்கை அணிக்கு வழங்குமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனம் , சர்வதேச கிரிக்கட் சபையிடம் கோரியுள்ளது.
Related posts:
அஸிக்காக காத்திருக்கும் சுழல்!
ஆஸி அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக ஜஸ்டின் லேங்கர்!
பாகிஸ்தான் அணைிய 228 ஓட்டங்களால் பந்தடியது இந்திய அணி!
|
|
|


