இலங்கை எதிர் நியூஸிலாந்து: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 305 ஓட்டங்கள்!
Friday, March 10th, 2023
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை அணிசார்பில் குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அத்துடன், தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களுடனும், கசுன் ராஜித்த 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியின் டிம் சவுத்தி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மாட் ஹென்றி 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


