இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று!
Sunday, December 10th, 2017
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்தத் தொடரை 3க்கு 0 என்ற அடிப்படையில் முழுமையாக கைப்பற்றினால் ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒருநாள் கிரிக்கட் தரவரிசையில் 120 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, 120 புள்ளிகளுடன் இந்திய அணி, இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை முழுமையாக கைப்பற்றினால் 121 புள்ளிகள் பெற்று தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தரவரிசையில் இலங்கை அணி 83 புள்ளிகளுடன் 8ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதலாவது போட்டியில் இலங்கை வரலாற்று வெற்றி!
இலங்கை – இந்தியா மூன்றாவது டெஸ்ட்: ராகுல் – தவான் ஜோடி புதிய சாதனை
சங்கக்காரவை கௌரவப்படுத்திய ஐசிசி!
|
|
|


