இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் தோல்வி!
Monday, July 19th, 2021இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் 263 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை இந்திய அணி சார்பில் அதிகப்படியாக பெற்றுக்கொடுத்தார்
Related posts:
2வது சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேற்றம்!
இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து அப்ரிடி !
வடமாகாண கரபந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சையும் கருத்தரங்கும்!
|
|