இலங்கை அணி வெற்றி!
Wednesday, August 15th, 2018
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 03 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தென்னாபிரிக்க அணி 16.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக கொக் 20 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணிக்கு 99 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 07 விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பாக சந்திமால் 36 ஓட்டங்களையும் தனஞ்சய 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
Related posts:
விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயற்படுபவர்களுக்கு கிடைத்தது அதிஸ்டம்!
உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்தார் தர்ஜினி!
தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!
|
|
|


