இலங்கை அணி படுதோல்வி!
Thursday, March 7th, 2019
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து.
இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய திஸர பெரேரா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
இதன்படி இலங்கை அணிக்கு 252 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
Related posts:
சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் அதிகளவில் இலங்கையர் பங்கெடுப்பு!
குசால் மெண்டிஸ் நீக்கம் : மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை!
அவங்க என்ன வேணுமானாலும் பேசிட்டுப் போகட்டும்- பாபர் ஆசம்மிடம் கூறிய இம்ரான் கான்!
|
|
|


