இலங்கை அணி குறித்து சங்கா கருத்து!
Thursday, April 27th, 2017
இலங்கை அணி விளையாடும் ஜூன் 01ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் பந்து வீசுவது என்பது முக்கியமானதொன்றாக இருகின்ற நிலையில், இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க விளையாடுவது என்பது அணிக்கு மிகவும் பக்கபலமானதொன்று என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவ்வாறே, இலங்கை அணியில் பலவித நுட்பங்களில் பந்து வீசும் வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்தில் சர்ரே அணி சார்பில் விளையாடும் சங்கா மேலும் குறிப்பிடுகையில்; நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண போட்டியானது 2019ம் ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டிக்கு உகந்ததொரு முன்னேற்பாடாகும்.
“இலங்கை அணி சவால்மிக்க அணிகளுடன் மிகவும் சிறப்பாக ஆடுகின்றனர். கடந்த ஒன்றரை வருட காலமாக அணியில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. எவ்வாறாயினும் இலங்கை அணி இன்னும் பலமிக்க அணியாகவே இருக்கின்றது…”
இம்முறை சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பிரபல அணிகளாக களமிறங்கினாலும் இங்கிலாந்து மண்ணில் ஆட்டம் நடைபெறுகின்றமையால் இங்கிலாந்து அணிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே நினைக்கின்றேன்.. மேலும் இலங்கை அணிக்கு சவால்மிக்க போட்டியாக அமையும்..” எனவும் சங்கா மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|
|


