Northern challengers உதைப்பந்தாட்ட போட்டி 3வது சுற்றில் விடத்தல்தீவு ஜக்கியம்!

Friday, November 11th, 2016

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடத்தும் Northern challengers  – 2016இன் உதைப்பந்தாட்டப் போட்டியில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 1ஆவது ஆட்டத்தில் சிவானந்தா அணியை எதிர்த்து விளையாடிய விடத்தல்தீவு ஜக்கியம் 0:0 என்ற கோல்கணக்கில் முடிவடைய சமநிலை தவிர்ப்பு மூலம் 5:4 என்ற கோல் கணக்கில் விடத்தல்தீவு ஜக்கியம் வெற்றி பெற்று 3ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றது.

2ஆம் போட்டியில் தாழ்வுப்பாடு சென்.அன்ரனீஸ் அணியை எதிர்த்து விளையாடிய யங்கம்பன்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3ஆம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. சிவானந்தா தாழ்வுபாடு சென்.அன்ரனீஸ் அணிகள் இத் தொடரில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

timthumb copy

Related posts: