இலங்கை அணியுடனான ஸ்கொட்லாந்து அணி அறிவிப்பு!
Friday, May 17th, 2019
ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி மற்றும் ஸ்காட்லாந்து அணி இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்காக பங்கேற்கும் ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு அணிகளுக்கும் இடையிலான குறித்த இரு போட்டிகளும் எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 03.30 மணியளவில் ஆரம்பமாவதோடு இரண்டாவது போட்டியானது 21ம் திகதி இலங்கை நேரப்படி 3.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
ஸ்காட்லாந்து அணி – கைய்ல் கோர்ட்ஸ் (தலைவர்), டிலன் பர்ஜ், ஸ்கொட் கெமர்ன், மெதிவ் க்ரோஸ், எலசாடேர் எவன்ஸ், மைகல் ஜோன்ஸ், காலம் மெக்லியர்ட், கவீன் மெய்ன், ஜோர்ஜ் மன்சி, சபியான் ஷரீப், டொம் சோல், க்ரேக் வொலஸ், மார்க் வொட், ப்ரெட் வில்.
Related posts:
ஜயசூரிய இராஜினாமா?
வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சஹீர்கான் - ஹர்பஜன்!
ஆஸ்திரேலிய கால்பந்து அணியில் டிம் காஹில்லுக்கு உலக அணியில் இடம்!
|
|
|


