இலங்கை அணியினரின் சாதனையை சமன் செய்தது தென்னாபிரிக்கா.!

Tuesday, October 11th, 2016

இலங்கை கிரிக்கெட் அணியினால் சாதிக்கப்பட்டிருந்த ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்களுக்கு வெற்றி பெற்று சாதித்திருந்த இலங்கை அணியின் சாதனையின் உலக சாதனையினை  தென்னாபிரிக்க அணி சமன் செய்துள்ளது.

அது, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 4வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அபாட் பந்துவீச்சில் திணறியது. இதனால் அந்த அணி 36.4 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ஓட்டங்களே பெற்றது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் (50), மாத்யூ வாடே (52) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அபாட் 4 விக்கெட்டையும், ஷமிஸி 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.இதன் பின்னர் 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா 35.3 ஓவரிலே இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அந்த அணி சார்பில் டுபிளசி 69 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ள தென் ஆப்பிரிக்கா இந்த வெற்றியின் மூலம் 4-0 என முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணியானது முதன் முதலில் குறித்த சாதனையினை  2007ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மற்றும் சிம்பாவ்பே அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் போது சாதித்திருந்தனர்.மேற்குறித்த இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

South Africa's bowler Tabraiz Shamsi (C) celebrates after taking a wicket during the fourth One Day International (ODI) between South Africa and Australia at the St. George's Park cricket stadium on October 9, 2016 in Port Elizabeth. / AFP / MICHAEL SHEEHAN (Photo credit should read MICHAEL SHEEHAN/AFP/Getty Images)

Related posts: