இலங்கை அணிக்கு இமாலய இலக்கு!
Thursday, July 27th, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 600 ஓட்டங்களை குவித்துள்ளது.
131.1 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 600 ஓட்டங்களை குவித்துள்ளது.காலியில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்களை இழந்து 399 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் 168 பந்துகளில் 190 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை ஆரம்பமாகியது.இன்றைய தினத்தில் புஜார 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் ஆட்டமிழந்தார்.அத்துடன், ரஹானே 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இதேவேளை பந்துவீச்சில், இலங்கை அணி வீரர் நுவான் பிரதீப் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.அவர் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


