இலங்கையை புரட்டியெடுத்த அண்டர்சன்!

Sunday, May 22nd, 2016

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 298 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்நிலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 91 ஓட்டங்களில் சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும். ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்டில் 434 விக்கெட்டுக்கள் வீழ்த்திய கபில்தேவின் சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

தனது 114வதுபோட்டியில் விளையாடும் ஆண்டர்சன் 18 முறை ஐந்து விக்கெட்டுக்கள், 2 முறை 10 விக்கெட்டுக்களுடன் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

Related posts: