இலங்கையை சொந்த மண்ணில் மதிப்பிட முடியாது – ரவி சாஸ்திரி !
Wednesday, July 26th, 2017
இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எளிதாக மதிப்பிட முடியாது என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் போட்டி அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா அந்த இடத்தை தக்க வைக்க போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியினர் தங்கள் வேலையை அறிவார்கள்.
தொழில்முறை கிரிக்கெட் வீரர்களான அவர்கள் மைதானத்துக்குள் சென்றவுடன் தங்கள் பொறுப்பை தானாக கையில் எடுத்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.மேலும், இலங்கை அணியை அவர்கள் சொந்த மண்ணில் எளிதாக மதிப்பிட முடியாது என கூறிய ரவி சாஸ்திரி, சொந்த மண்ணில் அந்த அணி இதுவரை செய்துள்ள சாதனைகள் மெச்சும்படியாக உள்ளது என கூறியுள்ளார்.
Related posts:
ஜோரூட் ஆட்டமிழப்பு சர்ச்சை: போட்டி நடுவரிடம் இங்கிலாந்து முறையீடு!
ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு!
`பார்சிலோனா`அணியிலிருந்து விலகும் மெஸ்ஸி !
|
|
|


