இலங்கையுடனான முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

இலங்கை மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதற்கமைய தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 298 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஜொனி பெஸ்வோட் 140 ஒட்டங்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ஒட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அத்துடன் தொடர்ந்து தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்களையும் இழந்து 119 ஒட்டங்களை பெற்றது.
இந்நிலையிலேயே இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 88 ஒட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
|
|