இலங்கையுடனான போட்டிகளில் இருந்து ஹஷிம் அம்லா விலகல்!

இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இன்று(13) நான்காவது போட்டி இடம்பெறவுள்ளது.
கடைசி இரண்டு போட்டிக்கான தென்னாபிரிக்கா அணியில் ஹஷிம் அம்லா இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது அவரது தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் கடைசி இரண்டு போட்டிக்கான அணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்குப் பதிலாக ரீசா ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
அணிகளின் வருகைக்காக பாகிஸ்தானின் புதிய திட்டம்!
70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண கிரிக்கெட் போட்டி!
ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி இன்று : கிண்ணத்தை வெல்லுமா இலங்கை!
|
|