இலங்கையிடம் வீழ்ந்தது வங்கதேசம்!

Sunday, December 4th, 2016

மகளிர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற 14வது போட்டியில் இலங்கை- வங்கதேசம் அணிகள் மோதியது.இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனால் வங்கதேச அணி முதலில் களமிறங்கி விளையாடியது.

நிதானமாக ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள் சேர்த்தது.அதிகபட்சமாக சஞ்ஜிதா இஸ்லாம் 35 ஓட்டங்களை சேர்த்தார். இலங்கை அணி சார்பில், சமரி அத்தப்பத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 94 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவரிலே 3 விக்கெட் இழந்து 97 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.சமரி அத்தப்பத்து 25 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ஓட்டங்கள் சேர்த்தார். இவருக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.

MOHALI, INDIA - MARCH 20:  Chamari Atapattu of Sri Lanka hits out during the Women's ICC World Twenty20 India 2016 match between Sri Lanka and Ireland at the IS Bindra Stadium on March 20, 2016 in Mohali, India.  (Photo by Jan Kruger-IDI/IDI via Getty Images)

Related posts: