இறுதி டெஸ்ட்:  இந்திய அணியின் பெயர் விபரம்!

Thursday, August 10th, 2017

இலங்கை அணி மற்றும் இந்திய அணிக்கு இடையில் இறுதி டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 12 ஆம் திகதி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியில் அக்ஷார் பட்டேல் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.அக்ஷார் பட்டேல் 30 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளதுடன், 7 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ளார்.அவர் இதுவரை 79 விக்கட்களை கைப்பற்றியுள்ளார்.இந்திய அணியின் பிரபல வீரர் ஜடேஜாவிற்கு இரு போட்டிகளில் விளையாடுவாதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், அக்ஷார் பட்டேல் அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார். இதனிடையே, இடம்பெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி 2 – 0 என்ற நிலையில் வெற்றி பெற்றுள்ளது.இறுதி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் விபரங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

Related posts: