இறுதியாக தலைமையேற்று களமிறங்குகிறார் டோனி!
Monday, January 9th, 2017
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிய டோனி, தலைவராக கடைசி போட்டியில் களமிறங்கி விளையாடவுள்ளார்.
நாளை மும்பையில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ களமிறங்கி விளையாடவுள்ளது. இதில் இந்திய ஏ அணி தலைவராக டோனி களமிறங்கி விளையாடுகிறார். இதுவே தலைவராக டோனி களமிறங்கி விளையாடும் கடைசிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
டோனி தலைவராக தோன்றும் கடைசி போட்டியை காண ரசிகர்கள் பெருமளவில் வருவார்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து, ஜனவரி 12ம் திகதி அதே மைதானத்தில் நடைபெறும் நடைபெறும் இரண்டாவது பயிற்சி ஆட்டத்திற்கு ரஹானே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related posts:
சாதித்து காட்டிய தரங்கவிற்கு வந்து குவியும் வாழ்த்துக்கள்!
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் - கால் இறுதியில் நடால்,ஜோகோவிச் !
கிண்ணம் வெல்வதற்கு மலிங்காவின் அந்த உரை தான் காரணம்!
|
|
|


