இருமினால் சிவப்பு அட்டை : காற்பந்துச் சங்கம் எச்சரிக்கை!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தற்போது ஐரோப்பிய நாடுகளில் இரசிகர்களின்றி காற்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மைதானங்களில் அடிக்கடி துப்பவோ வீரர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிக்கவோ கூடாது எனவும் முடிந்தளவு வீரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் தற்போது காற்பந்து போட்டிகளின் போது எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவர் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால் சிவப்பு அட்டை வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
ஒருநாள் தொடருக்கு தயாரான இலங்கை!
தங்க மகன்னுக்கு 21 ஆவது தங்கம்!
கங்குலியின் சாதனையை சமன் செய்யப்போகும் கப்டன் கூல்!
|
|