இருபதுக்கு – 20 : விக்கெட் காப்பாளராகிறார் குசல் மென்டிஸ்
Wednesday, February 22nd, 2017
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக குசல் மென்டிஸ் கடமையாற்றுவாரென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.சி.சி.யின விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தால் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராகவும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் செயல்பட்ட நிரோஷன் டிக்வெல்லவுக்கு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 போட்டியில் நிரோஷன் டிக்வெல்லவுக்கு பதிலாக குசல் மென்டிஸ் விக்கெட் காப்பாளராக செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சந்தீப் பாட்டீல் !
இலங்கை வீரர்கள் செய்தது சரியே - இந்திய மருத்துவர்!
முதல்முறை உலகக்கிண்ணம் வென்று பெல்ஜியம் சாதனை!
|
|
|


