இனவெறுப்பு செயற்பாடுகளை ஒழிக்க 10 ஆண்டுகளுக்குள் 25 கோடி அமெரிக்க டொலர்கள் வழங்க முடிவு – அமெரிக்க தேசிய கால்பந்து கழகம்!

அமெரிக்காவில் இனவெறுப்பு செயற்பாடுகளை ஒழிப்பதற்கு தேசிய கால்பந்து கழகம் 10 ஆண்டுகளுக்குள் 25 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவில் வாழும் ஆபிரிக்க கறுப்பின மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வகுப்பு வாத போக்கிலான நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு இந்த நிதியினை செலவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதம் இசைக்கப்படும் போது விளையாட்டு வீரர்களின் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என தேசிய கால்பந்து கழகம் கடந்த வாரம் கோரியிருந்தது.
தேசிய கீதம் இசைக்கப்படும் போது, விளையாட்டு வீரர்கள் முளந்தாள் இடுவதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் தடை விதிக்கப்பட்டது.
ஜோர்ஜ் ஃப்ளொய்ட் அமெரிக்க காவல்துறையினரால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 வார காலமாக சர்வதேச ரீதியாக ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச ரீதியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|