ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப் போன பரிதாபம்!

Thursday, March 2nd, 2017

பாகிஸ்தானில் நடைபெற்ற பிரிமியர் லீக் போட்டியின் பிளே ஆப் சுற்றில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் சமி தலைமையிலான பேசவார் ஜால்மி அணி பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது.

பாகிஸ்தானில் PSL எனப்படும் பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பிளே ஆப் சுற்றுப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மேற்கிந்திய வீரர் டேரன் சமி தலைமையிலான Peshawar Zalmi அணியும், பாகிஸ்தான் வீரர் சர்பிராஸ் அகமது தலைமையிலான Quetta Gladiators அணியும் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய Quetta Gladiators அணிக்கு துவக்க வீரர் அகமது செசாத் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்துடன் துவக்கினர். கேவின் பீட்டர்சன் மற்றும் செசாத்தும் அதிரடியை ஆட்டத்தை காட்டத்துவங்கினர். இதனால் அந்தணி 10 ஓவர் முடிவில் 100 ஓட்டங்களை தாண்டியது. சேசாத் 71 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பீட்டர்சன் 40 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டியதால், இறுதியாக Quetta Gladiators அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.

Quetta Gladiators அணி சார்பில் அதிகபட்சமாக செசாத் 71 ஓட்டங்களும், பீட்டர்சன் 40 ஓட்டங்கள் எடுத்தனர். Peshawar Zalmi அணி சார்பில் வாகாப் ரியாஷ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடின இலக்கை துரத்துவதற்கு களமிறங்கிய Peshawar Zalmi அணிக்கு துவக்க வீரரான அக்மல் 1 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மாலன் 56 ஓட்டங்கள், சம்யூல்ஸ் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அணியின் விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், ஹபீஸ் மட்டும் நிலையாக நின்று அதிரடி காட்ட Peshawar Zalmi அணி வெற்றி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தது. ஹபீஸ் 77 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட, அந்தணியால் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், பரிதாபமாக 1 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

 625.500.560.350.160.300.053.800.748.160.70-7-1

Related posts: