இந்திய வீரர் இலங்கையில் சாவு!

Thursday, September 7th, 2017

இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக 19 இந்திய இளம் வீரர்கள் இங்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: