இந்திய அணிக்காக விளையாடுவதில் பெருமை அடைகின்றேன்: பதான்!
Thursday, February 16th, 2017
இந்திய அணிக்காக விளையாடுவது பெருமை அளிப்பதாக சகலதுறை ஆட்ட வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு தேசிய அணிக்காக விளையாடிய தருணங்களை நினைவு கூர்ந்தபோதே பதான் மேற்படி விடயத்தையும் தெரிவித்தார்.
இந்திய அணிக்காக விளையாடிய தருணங்களில், முஸ்லிமாக இருந்துகொண்டு எதற்காக இந்திய அணிக்காக விளையாடுகின்றீர்கள் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடம் கேள்வி கேட்டதாகவும் குறித்த பெண்ணுடனான கலந்துரையாடல் தன்னுடைய கிரிக்கட் வாழ்க்கையில் பெரும் உந்துதலை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய அணிக்காக இறுதியாக விளையாடிய பதான் அதன் பின்னர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக போராடி வருகின்றார். எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான புனே அணியில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் சோபிக்க தவறிவிட்டார்.
இந்நிலையில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கையில் பதான் செயற்படுகின்றார். 2012 ஆம் ஆண்டு வரையில், 29 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் பதான் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


