இந்தியா – ஜிம்பாப்வே மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று!

இந்தியா – ஜிம்பாப்வே மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடக்கிறது. டோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றியது. அடுத்ததாக இந்தியா-ஜிம்பாப்வே இடையே மூன்று சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
ஒரு நாள் தொடரில் இந்திய அணி, ஜிம்பாப்வேயை 200 ரன்களை கூட (168 ரன், 126 ரன், 123 ரன்) நெருங்க விடவில்லை. அந்த அளவுக்கு ஜஸ்புரித் பும்ரா, தவால் குல்கர்னி, பரிந்தர் ஸ்ரன், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகிய இந்திய பவுலர்கள் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களை விழிபிதுங்க வைத்தனர்.
பேட்டிங்கில் செஞ்சுரி ‘நாயகன்’ லேகேஷ் ராகுல், பயஸ் பாசல், கருண் நாயர், அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு மட்டுமே பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது.ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் மிக துரிதமாக ஆட வேண்டும் என்பதால் இந்த முறை கணிசமான பேட்ஸ்மேன்கள் களம் காண வாய்ப்பு கிடைக்கலாம். ஜிம்பாப்வே பயணத்தில் இதுவரை பேட் செய்யாத கேப்டன் டோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
Related posts:
ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரவீராங்கணைகளுடன் 46 அதிகாரிகள் சென்றமை தொடர்பில் விசாரணை!
சங்ககாராவின் சாதனையை முறியடித்த கோலி!
கிரிக்கெட் வீரருக்கு உடல் நலக் குறைவு - தனிமை படுத்தப்பட்டார்!
|
|