இந்தியா- இலங்கை மோதிய போட்டியில் பிக்சிங்!
Saturday, July 15th, 2017
2011ம் ஆண்டில் நடந்த இந்தியா- இலங்கை அணிகள் மோதிய உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்ததாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சங்ககாரா வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அர்ஜூன ரணதுங்க, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சங்ககாரா கோரியுள்ளார்.
ஆனால் அதேசமயம் 2011 உலக கிண்ண இறுதிப்போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் நான் வர்ணனையாளராக இருந்தேன். உண்மையில் இலங்கையின் செயல்பாடு கண்டு நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.
அன்று என்ன நடந்தது என்பதை நான் வெளியிடமாட்டேன், ஆனால் ஒருநாள் நிச்சயமாக உண்மையை வெளியிடுவேன். எனினும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|
|


