இந்தியாவின் வெற்றியை பறித்த  மேற்கிந்திய தீவுகள்!

Thursday, October 25th, 2018

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் த்ரில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் 5 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரண்டு டெஸ்ட் தொடரையும் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.

தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மிக சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைப்பெற்ற 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கடைசி வரை மிரட்டியது. கடைசி நேரத்தில் போட்டி சமனில் முடிந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி விராட் கோஹ்லி 157 ராயுடு 73 ரோகித் சர்மா 29 டோனி 20 ஓட்டங்கள் குவிக்க 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 321 ஓட்டங்களை குவித்தது.

இந்த போட்டியில் விராட் கோஹ்லி 81 ஓட்டங்கள் அடித்த போது ஒருநாள் போட்டியில் 10000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனையைப் படைத்தார்.

322 ஓட்டங்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய மேற்கிந்திய அணிக்கு கிரண் பவல் 18 சதிரபால் ஹேம்ராஜ் 32 ஓட்டங்கள் என நல்ல தொடக்கம் கொடுத்தனர். மர்லன் சாமுவேல் 13 ஓட்டங்களில் விக்கெடை இழந்தார்.

சாய் ஹோப் மற்றும் சிம்ரொன் ஹெட்மெயர் இணை அதிரடியாக விளையாடினர். இவர்களின் ஜோடியால் இந்திய அணி திணறியது. விண்டீஸின் சிம்ரான் ஹெட்மியர் 64 பந்துகளில் 7 சிக்ஸர்இ 4 பவுண்டரிகள் விளாசி 94 ஓட்டங்கள் குவித்தார்.

இவரின் சிக்ஸர்களால் இந்திய பவுலர்கள் செய்வதறியாது தவித்தனர். சாய் ஹோப் சிறப்பாகவும் பொறுமையாக விளையாடி சதம் அடித்து (123) அசத்தினார். 50 ஓவர் முடிவில் விண்டீஸ் அணியும் 321 ஓட்டங்களை மட்டுமே எடுத்ததால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

Related posts: