இந்தியன் ப்ரீமியர் லீக் – கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதும் இறுதிப் போட்டி இன்று!
Sunday, May 26th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
முன்னதாக முதலாவது தகுதிகாண் சுற்றில் ஏற்கனவே குறித்த இரு அணிகளும் மோதியிருந்தன.
அதில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
குறித்த போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தி போட்டிக்குத் தகுதிபெற்றது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள 2024 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30ற்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சங்காவும் அஞ்சலோ எதிரெதிராகினர்!
மலிங்கவின் உலகக் கிண்ண வாய்ப்பு நிராகரிப்பு!
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் – குசல் மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு விசா கிடைப்ப...
|
|
|


