இந்தியன் ப்ரீமியர் லீக் – பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது ரோயல் செலஞ்ர்ஸ் பெங்களூரு அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்ர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பில், அதிகபடியாக விராட் கோலி 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், 242 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 17 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கெளரவம்!
புதிய ஒப்பந்தில் றொமேரோ!
இந்த அணிகள் தான் உலகக் கால்பந்து கிண்ணத்தை வெல்லும் - இந்திய அணித்தலைவர் சுனில் சேத்ரி!
|
|