இதற்கெல்லாம் மெஸ்சி தான் காரணம் -நெய்மரின் தந்தை!

தனது மகன் நெய்மர் பார்சிலோனா அணியில் இணைந்து விளையாடுவதற்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்சி தான் காரணம் என்று நெய்மரின் தந்தை நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
பிரேசில் கால்பந்து அணியின் இளம் வீரரான நெய்மர் 2013ம் ஆண்டு பார்சிலோனா அணியில் இணைந்தார். தற்போது அவர் பார்சிலோனா அணியில் உள்ள சுவராஸ், மெஸ்சி ஆகியோருடன் இணைந்து கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் நெய்மர் பார்சிலோனா அணியில் இணைந்து விளையாட மெஸ்சி தான் காரணம் என்று நெய்மரின் தந்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், கூறுகையில், மெஸ்சியை பற்றி அனைவருக்கும் தெரியும். அவருக்காகவே நெய்மர் பார்சிலோனா அணியில் விளையாடுகிறார். மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற வீரர்கள் இல்லை என்றால் நெய்மரும் இல்லை. அவர்கள் பிலே, மரடோனா போன்றவர்கள். அந்த வீரர்கள் தான் பலருக்கு ஊக்கம் அளித்தவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.பார்சிலோ அணி நெய்மருடனான ஒப்பந்தத்தை மேலும் 5 ஆண்டுகள் நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|