இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் மென்செஸ்டர் யுனைடெட் அணி சாதிக்கும்: பயிற்சியாளர் மவுரினோ!

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில், மென்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அணியின் பயிற்சியாளர் ரோஸ் மவுரினோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த தொடரில் 6வது இடம்பிடித்த மென்செஸ்டர் யுனைடெட் அணி, எதிர்வரும் தொடரில் சாதிக்க கூடிய சாதியக் கூறுகள் தென்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரோஸ் மவுரினோ கூறுகையில் ”எங்களால் வெற்றி பெற முடியுமா? என்றால் எங்களால் முடியும். எங்கள் அணி சிறந்ததாகவும், வலுவானதாகவும் இருக்கிறது. ஆனால், மற்ற கழகங்களும் அதிக வலுவாக உள்ளது. ஆகவே, வரும் தொடர் மிகவும் கடினமாக இருக்கும்.
பொதுவாகவே, ஒரு அணிக்கு பயிற்சியாளராக சென்றபின் முதல் தொடரை விட இரண்டாவது தொடர் சிறந்ததாக இருக்கும். ஏனென்றால், கழகத்தைப் பற்றி தெரிந்திருக்கும். வீரர்களை பற்றி தெரிந்திருக்கும். வீரர்களுக்கும் என்னைப் பற்றி தெரிந்திருக்கும்” என கூறினார்.
பென்பிகா, போர்ட்டோ, செல்சியா, ரியல் மெட்ரிட் ஆகிய கழக அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த 54 வயதாகும் ஜோஸ் மவுரினோ, கடந்த ஆண்டு மென்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாராக நியமிக்கப்பட்டதன் பின்னர் லீக் கிண்ணம், ஐரோப்பா லீக் ஆகிய தொடர்களை அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|