இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்!
Thursday, September 29th, 2022
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றை 5ஆவது இருபதுக்கு20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் 146 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்து.
இதன்மூலம் இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 3 க்கு 2 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
000
Related posts:
பளு தூக்குதல் தடைக்கெதிராக ரஷ்யா மேன்முறையீடு!
மீண்டும் கேன் வில்லியம்சிற்கு Sir Richard Hadlee விருது!
கோபா கால்ப்பந்து – சாம்பியன் பட்டம் வென்றது பிரேசில்!
|
|
|


