இங்கிலாந்தை மிரள வைத்த ஆப்கானிஸ்தான்!

இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப வீரர்களாக ஜாசன் ரோய், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
ஆரம்பத்திலே இருந்தே இங்கிலாந்து வீரர்கள் ஆப்கான் பந்துவீச்சில் திணறினர். இதனால் ஆரம்ப வீரர்கள் ஜாசன் ரோய் (5), ஜேம்ஸ் வின்ஸ் (22) விரைவில் வெளியேறினர்.
ஜோ ரூட் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்த நிலையில் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அணித்தலைவர் மோர்கன் (0), பென் ஸ்டோக்ஸ் (7), பட்லர் (6). கிறிஸ் ஜோர்டன் (18) ஆகியோர் வரிசையாக சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து 85 ஓட்டங்களுக்கே 7 விக்கெட்டை இழந்து தவித்தது.
இந்நிலையில் மொயீன் அலி, டேவிட் வில்லி கடைசி நேரத்தில் அதிரடி காட்டினர். 19வது ஓவரில் மட்டும் 25 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. இதனால் அணியின் ஓட்டங்கள் சற்று உயர்ந்தது.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்களை குவித்துள்ளது. மொயீன் அலி 41 ஓட்டங்களுடனும், டேவிட் வில்லி 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி, ரசீட் கான் தலா 2 விக்கெட்டுகளையும், அமீர் ஹம்மா, சென்வாரி தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
Related posts:
|
|