இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக ஜோ ரூட் நியமனம்!

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் தலைவராக இருந்த அலாஸ்டர் குக், தனது பதவியை இராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து துணை தலைவராக இருந்த ஜோ ரூட் இப்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குக் கேப்டன்ஷிப்பின் கீழ் அறிமுக வீரராக களம் கண்ட ஜோ ரூட், இப்போது இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.
இது தொடர்பாக ஜோ ரூட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி எனக்கு வழங்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகும். எங்கள் அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களை வழிநடத்திச் செல்வதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் கூறுகையில்,
“எங்கள் அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு ஜோ ரூட் சரியான நபர். அவர், தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது எனக்கு த்ரில்லாக இருக்கிறது’ என்றார்.
இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 11 சதம், 27 அரை சதங்களுடன் 4,594 ரன்கள் குவித்துள்ளார்.
Related posts:
|
|