இங்கிலாந்து அணியின் தலைவராக ரூனி நீடிப்பு!

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவராக வெய்ன் ரூனி தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெய் ரூனியை தொடர்ந்தும் அணித் தலைவராக தெரிவுசெய்வது இலகுவான தீர்மானம் என இங்கிலாந்து அணியின் புதிய முகாமையாளர் சாம் அலடையஸ் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி சார்பில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ள வெய்ன் ரூனி, கடந்த ஆண்டு ஸ்ரிவன் ஜெராட்டிடம் இருந்து தலைமை பொறுப்பை கையேற்றிருந்தார்.
இங்கிலாந்து அணியின் சகவீரர்கள் வெய்ன் ரூனிக்கு மிகுந்த மரியாதை வழங்குவதாகவும் தலைவர் என்ற வகையில் அவர் பொறுப்புடன் செயற்படுவதாகவும் சாம் அலடையஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிலோவாக்கியா அணியை இங்கிலாந்து சந்திக்கவுள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் முகாமையாளர் ரொய் ஹுஸ்டனின் வழிநடத்தலில் ஐரோப்பிய வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்ற ரூனி தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதி 16 அணிகள் பங்குபற்றிய சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.
எவ்வாறாயினும் வெய் ரூனி, இங்கிலாந்து அணியின் சிறந்த தலைவர் எனவும் மிகவும் மூத்த வீரர் என்ற வகையில் அணியை வழிநடத்த கூடிய சிறந்த தெரிவாக அவர் உள்ளதாகவும் சாம் அலடையஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|