ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகளுடன் அசத்தி வரும் புஜாரா!

Thursday, December 27th, 2018

மெல்போர்னில் நடைபெற்று வரும் 3ஆவது டெஸ்டில் 280 பந்துகளில் சதம் எடுத்துள்ளார் புஜாரா. இந்தத் தொடரில் இதுவரை 328 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2 சதம் ஒரு அரை சதம் என இந்த டெஸ்ட் தொடர் புஜாராவுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

மெல்போர்ன் டெஸ்டில் அடித்த சதத்தின் மூலம் நிகழ்த்திய சாதனைகள்:

* 280 பந்துகளில் 100 ரன்களை இந்த டெஸ்டில் எடுத்துள்ளார் புஜாரா. அவருடைய 17 சதங்களில் அதிகமான பந்துகள் தேவைப்பட்டது இந்தச் சதத்துக்குத்தான். இதற்கு முன்பு வரை சதமடிக்க அவருக்கு 250 பந்துகள்கூட தேவைப்பட்டதில்லை.

* வெளிநாடுகளில் விளையாடிய டெஸ்ட் தொடர் ஒன்றில் முதல்முறையாக இரு சதங்களை எடுத்துள்ளார் புஜாரா.

* கடந்த 15 வருடங்களில் கோலியைத் தவிர ஓர் இந்திய வீரர் எடுத்த நிதானமான சதம் இது. 2012 நாகபுரி டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக 289 பந்துகளை எதிர்கொண்டு சதமடித்தார் விராட் கோலி.

* 2017 ஜனவரி 1 முதல் 4000-க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்ட ஒரே டெஸ்ட் பேட்ஸ்மேன், புஜாரா மட்டுமே. அதாவது 40 இன்னிங்ஸில் 4643 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். அதாவது ஒவ்வொரு இன்னிங்ஸுக்கும் 116 பந்துகள். இதற்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். 39 இன்னிங்ஸில் 3808 பந்துகள்! (ஒவ்வொரு இன்னிங்ஸுக்கும் 97 பந்துகள்).

* வெளிநாடுகளில் புஜாரா எடுத்துள்ள 7-வது சதம் இது.

* ஆஸ்திரேலியாவில் சதமடிக்க அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர்கள்

307 பந்துகள் – ரவி சாஸ்திரி – சிட்னி 1992

286 பந்துகள் – கவாஸ்கர் – அடிலெய்ட் 1985

280 பந்துகள் – புஜாரா – மெல்போர்ன் 2018

* இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை

246, 204, 103, 11, 319.

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்கள்

சந்தர்பால் – 1477 பந்துகள்

குக் – 1438 பந்துகள்

ஸ்டீவ் ஸ்மித் – 1416 பந்துகள்

புஜாரா – 883 பந்துகள் (இந்தத் தொடரில் இன்னமும் அதிகபட்சமாக 3 இன்னிங்ஸ் மீதமுள்ளன.)

Related posts: