ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வெளியேற்றப்பட்டார் ஜோகோவிச்!
Friday, January 20th, 2017
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்டஸ்லாம் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றிலேயே நட்சத்திர வீரர் ஜோகோவிச் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள செர்பியா நட்சத்திர வீரர் ஜோகோவிச், 119 இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்டாமினுடன் மோதினார்.
இதில், இஸ்டாமின் 7-10, 5-7, 2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
3-2 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த நட்சத்திர வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் இராண்டாவது சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுள்ளார். இது ஜோகோவிச் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts:
ஜோரூட் ஆட்டமிழப்பு சர்ச்சை: போட்டி நடுவரிடம் இங்கிலாந்து முறையீடு!
தீர்மானமிக்க போட்டியில் இன்று மோதும் இலங்கை!
விடைபெறுகிறார் ஆஷிஸ் நெஹ்ரா!
|
|
|


