ஆஸி பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கை போட்டிகளில் பங்கேற்பு!
Friday, September 30th, 2016
அவுஸ்திரேலிய “ஸதர்ன் ஸ்டார்ஸ்” பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைகும் இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் இந்த அணி பங்கு கொள்ளும்.
ஒருநாள் ஆட்டம், ரீ 20 ஆட்டம் ஆகியவற்றில் இந்த அணி பங்கேங்கும். இந்த அணியை வரவேற்று அவுஸ்திரேலிய இல்லத்தில் நடைபெற்ற வைபவத்தில் பதில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரிம் ஹக்கின்ஸ் உரை நிகழ்த்தினார்.
இருநாடுகளின் இதயங்களிலும் கிரிக்கெட் விசேட இடத்தை வகிக்கின்றது. இந்த கிரிக்கெட் தொடர்புகள் ஒரு நூற்றாண்டு காலத்தையும் தாண்டியவை. இரு நாடுகளும் கிரிக்கெட்டை நேசிக்கின்றன என்று பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
ஸதர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணித்தலைவி மெக்லேனிங் பேசுகையில் இலங்கைக்கு வருகை தந்தமை குறித்து நாம் உணர்வு பூர்வமாக உள்ளோம். எமது பெண்கள் இதற்கு முன்னரும் இங்கு வந்துள்ளனர். அவர்கள் தமது விஜயம் குறித்து மகிழ்வும் தெரிவித்தனர்.
இலங்கையுடன் விளையாடுவது குறித்து நாம் மகிழ்வுறுகிறோம் எனத் தெரிவித்தார். விரைவில் கன்பெரா பல்கலைக்கழகம் விளையாட்டுத் தலைமைத்துவ முகாமை நிகழ்ச்சியை கொழும்பில் நடத்த உள்ளமை விசேடமாகும்.

Related posts:
|
|
|


