ஆஸிக்கு எதிரான இலங்கைஅணி அறிவிப்பு!
Friday, September 16th, 2016
இலங்கை பெண்கள் அணிக்கும் அவுஸ்திரேலிய பெண்கள் அணிக்குமிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டுப் பெண்கள் அணிகளும், இருதரப்பு கிரிக்கெட் தொடரொன்றில் பங்குபற்றும் முதலாவது சந்தர்ப்பமாக அமையவுள்ள இந்தத் தொடரில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு மேலதிகமாக, ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியொன்றும் உள்ளடங்கியுள்ளது.
இந்தத் தொடர், ஞாயிற்றுக்கிழமை (18) தம்புள்ளையில் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருடன் ஆரம்பிக்கவுள்ளது.தலைவி ஷஷிகலா சிரிவர்தனவின் காயம் காரணமாக, அணியை, சாமரி அத்தப்பத்துவே வழிநடத்தவுள்ளார்.
இலங்கைக் குழாம்: சாமரி அத்தப்பத்து, பிரசாதனி வீரக்கொடி, டிலானி மனோதரா, நிபுனி ஹன்சிகா, சாமரி பொல்கம்பொல, இஷானி லொக்குசூரிய, உதேஷிக பிரபோதனி, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, இனோஷி பிரியதர்ஷனி, இமல்கா மென்டிஸ், அமா காஞ்சனா, ஹர்ஷித மாதவி.

Related posts:
|
|
|


