ஆஷஷ் தொடரின் நான்காவது போட்டி சமனிலையில்!

Monday, January 1st, 2018

அவுஸ்திரேலிய ௲ இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஷ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி, வெற்றித் தோல்வியின்றி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து, 263 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டி நிறுத்தப்பட்டு, அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 102 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 86 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித்தின் நிதானமான ஆட்டத்தினூடாக இந்த போட்டி வெற்றி தோல்வியற்ற முடிவைத்தேடித்தந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 327 ஓட்டங்களை குவித்திருந்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வோர்னர் 103 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 76 ஓட்டங்களையும், ஷோர்ன் மார்ஷ் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார், இங்கிலாந்து சார்பில் ஸ்டுவைட் புரோட் 4 விக்கட்டுகளையும், ஜேம்ஸ் எண்டர்சன் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதேவேளை தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 491 ஓட்டங்களை குவித்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெஸ்ரியா குக், 244 ஓட்டங்களை ஆட்டமிழக்காது, தனித்து நின்று போராடி இரட்டைச்சதம் பெற்றார். ரூட் 61 ஓட்டங்களையும், பந்துவீச்சில் கலக்கிய ஸ்வர்ட் ப்ரோட் 56 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஹசில் வூட் மற்றும் லையன் தலா 3 விக்கட்டுக்களையும், கம்மின்ஸ் 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

இரட்டைச்சதம் பெற்ற அலிஸ்டர் குக் ஆட்டநாயகனாக தெரிவானார். தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைப் சந்தித்த இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டியில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த போதும், நான்காம் நாள் ஆட்டத்தின் போது அதிரடி வீரர் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் நிதானமான துடுப்பாட்டம் மற்றும் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி இங்கிலாந்திடமிருந்து கை நழுவி சமனிலை முடிவை தந்தது. இரு அணிகளுக்கிடையான இறுதி போட்டி வருகின்ற ஜனவரி 4காம் திகதி சிட்னியில் இடம்பெறவுள்ளது.

Related posts: