ஆப்கானிஸ்தான் – இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 155 ஓட்டங்களால் வெற்றி!

Monday, February 12th, 2024

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இன்னிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் 309 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அந்த வகையில் 2 – 0 என 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: