ஆடவருக்கான உலகக் கிண்ண ஹொக்கி போட்டி 28 ஆரம்பம்
Thursday, November 22nd, 2018
அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 16 சர்வதேச அணிகள் பங்குகொள்ளும் ஆடவருக்கான உலகக் கிண்ண ஹொக்கி போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்திய ஒரிசா மாநிலத்தில் இடம்பெறும் இந்த போட்டித் தொடர் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவடையும். 27 ஆம் திகதி ஆரம்ப விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள அதேவேளை பிரபல தொலைக்காட்சி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் ஆரம்ப விழாவிற்கான அனுமதி சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Related posts:
தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடம்!
BPL தொடர் - முதன்முறையாக களமிறங்கவுள்ள இயன் மோர்கன் மற்றும் ஜே.பி. டுமினி!
‘106 ஆவது பொன் அணிகளின் போர்’ நாளை வட்டுக்கோட்டையில் ஆரம்பம்!
|
|
|


